நான் அமைச்சராக இருக்கும்வரை அது நடக்காது!! எல்லை தாண்டினால் பிடித்து கடற்படையிடம் அல்லது பொலிஸாரிடம் கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்...
கடற்றொழில் அமைச்சராக நான் இருக்கும்வரை கடற்றொழில் துறையில் சட்டவிரோதமான எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்புக்கிடையாது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொிவித்திருக்கின்றார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன் ஆயத்தக் கலந்துரையாடலில்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடி மற்றும் அத்துமீறிய இந்தியா ரோலர்களின் வருகை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அண்மையில் நெடுந்தீவை ஆண்டிய கடற்பரப்பில் இந்தியா மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு,
அவற்றை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் தமது சுய இலாப அரசியலுக்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப் போவதாக தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கிடையாது. நாட்டின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில்
கடந்த அமைச்சரவையில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அவரும் அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் விரைவில் டில்லி நோக்கி பயணமாக உள்ளார். கடற் தொழில் அமைச்சராக இருக்கும்வரை
கடலில் சட்ட விரோதமான செயல்பாடுகளை எக் காரணம் கொண்டு அனுமதிக்கப் போவதில்லை. வடபகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்தால் மீனவர்கள் அவர்களை பிடித்து கடற்படையினரிடமோ
அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம். ஆகவே நான் ஏற்கனவே மீனவர்களுக்கு சொல்லியிருக்கிறேன் நீங்கள் யாரும் பயப்படவேண்டிய தேவையில்லை கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால்
பிடியுங்கள் பிரச்சினைகளை கையாள்வதற்கு நான் இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.