யாழ்.சின்னக்கடை மற்றும் பண்ணை சந்தைகளில் அதிரடி சோதனை! 11 வியாபாரிகள் மீது நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சின்னக்கடை மற்றும் பண்ணை சந்தைகளில் அதிரடி சோதனை! 11 வியாபாரிகள் மீது நடவடிக்கை..

யாழ்.பண்ணை மற்றும் சின்னக்கடை மீன் சந்தைகளில் அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள், சேவைகள் பிரிவின் உத்தியோகஸ்த்தர்கள் நேற்று (மார்ச் 1) புதன்கிழமை பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன்சந்தை மற்றும் சின்னக்கடை மீன்சந்தை ஆகிய இடங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவ்வேளையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்தபோது அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அத்துடன் அந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவையினை நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

என அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினர் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு