மயிலிட்டி கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து..

ஆசிரியர் - Editor I
மயிலிட்டி கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து..

மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது.

இச் சம்பவம் அதிகாலை 1 மணியளவில் இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக  கடற்படையினர் தெரிவித்தனர். 

இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர காலை தொடக்கம் நீரினை  பீச்சி அடிக்கப்படுகிறது.

ஆனாலும் கப்பலின் இயந்திர பகுதி  கடுமையாக தீ பற்றியதால் அங்குள்ள டீசல் தாங்கி Gas என்பன உள்ளதால்  தீ தொடர்ந்து எரிகிறது. 

வெடிக்கும் அபாயம் உள்ளது. இக் கப்பல் தனியார் ஒருவருடையது.  சீமெந்து கொண்டு ஏற்றிவர பயன்படுத்திய கப்பலாகும்.  

திருத்த வேலை காரணமா ஒருவருடமா நங்கூரம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு