யாழில் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பால் இவ்வளவா?

ஆசிரியர் - Admin
யாழில் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பால் இவ்வளவா?

யாழ்.மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 11 இலட்சம் லீற்றர் பசுப்பால் உற்பத்தி செய்யப்படுவதாக யாழ்.மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி- வத்சலா அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் “தூயபாலை உட்கொள்வோம்” எனும் செயற்திட்ட நிகழ்வு அண்மையில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் தினம் தோறும் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் ஐந்து இலட்சம் லீற்றர் பால் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த ஐந்து இலட்சம் லீற்றர் பசுப்பாலையும் வெளியே செல்லவிடாது நாம் தடுக்க வேண்டும்.

பசுப்பாலைக் குடிப்பதன் மூலம் கிராமியத்தின் பொருளாதாரத்தை வளர்ப்பது தான் அரசாங்கத்தின் திட்டமாகும். எங்களுடைய கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களம் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறிய நிதியிலேயே இந்த வருடம் “தூயபாலை உட்கொள்வோம்” எனும் செயற்திட்டத்தை முதன்முறையாக ஆரம்பித்து நடாத்தி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு