பழைய இரும்பு சேகரிப்பதாக கூறிக்கொண்டு நீர் இறைக்கும் இயந்திரம் களவாடிய இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
பழைய இரும்பு சேகரிப்பதாக கூறிக்கொண்டு நீர் இறைக்கும் இயந்திரம் களவாடிய இருவர் கைது..

யாழ்.தீவகம் வேலணை- சோளாவத்தை பகுதியில் பழைய இரும்பு சேகரிப்பதாக கூறிக்கொண்டு வீ டொன்றிலிருந்த நீர் இறைக்கும் மோட்டாரை திருடி ய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளா ர்கள்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறி த்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று பகல்  வேலணை  சோளாவத்தை  பகுதியில் பழைய இரும்பு ,  உடைந்த பிளாஸ்ரிக்  கொள்வனவு  செய்வதாக  கூறிக்கொண்டு  வீடொன்றினுள்  நுழைந்த  இருவர்  அங்கு  எவருமில்லாததை  சாதகமாக்கி  அங்கிருந்த  நீரிறைக்கும்  மோட்டார் இயந்திரமொன்றினை  களவாடியுள்ளனர்.

இதனை அவதானித்த  வேலணை பிரதேச சபை உறுப்பினர்  சி. அசோக்குமார்  அவ்வாகனத்தினை  பின்தொடர்ந்து  விரட்டிச்சென்றதோடு   மண்டைதீவு பொலிசாருக்கு  தகவலும் வழங்கியிருந்தார்  .  

 பின்னர்    மண்டைதீவு  சோதனை சாவடியில்  வைத்து  இந்த இருநபர்களும்   சப் இன்ஸ்பெக்டர்  விவேகானந்தராஜ்  குழுவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்   .                                 இவர்களிலொரு  நபர்  காத்தான்குடியை சேர்ந்தவராவார்  .  அண்மையில்   #கள்ளமாடு  கடத்தலில்  சிக்கி   சுமார்  இரண்டரை  மாதங்கள்  சிறையிலிருந்தவரென்பதும்  குறிப்பிடத்தக்கது .     

 மேற்படி  பழைய  இரும்பு கொள்வனவு  செய்வதற்காக  தீவுப்பகுதிக்குள்  நுழைகின்ற  சிலருக்கும்   சட்டவிரோத  மாடு கடத்தல் கும்பலிற்கும்  நெருங்கிய தொடர்பிருப்பதாக   பொலிசாரும்  , சமூக ஆர்வலர்களும் குற்றம்  சுமத்துகின்றனர்  .  தினமும்   பழைய  இரும்பு  கிடைப்பதற்கு   இது  போர்  உக்கிரமாக  நடைபெற்ற  வன்னி  பிராந்தியமல்ல  !   

இவர்கள்  பழைய  இரும்பு  கொள்வனவு  போர்வையில்  சட்டவிரோத  செயற்பாடுகளை  மேற்கொள்வதற்கே   டீசலுக்கு  அதிக  பணம் செலவழித்து  யாழ்ப்பாணத்திலிருந்து   தீவகத்தினுள்  நுழைகின்றனர்  .  

மேலும்  அங்கிருந்து  புறப்படும்போதே   சில  இரும்பு பொருட்களையும்  ,  உடைந்த  பிளாஸ்ரிக்  பொருட்களையும்   வாகனத்தினுள்  வைத்து  கொண்டுவருகின்றனர் . பெரும்பாலான  தடவைகள்  மீண்டும் அதே  பொருட்களுடனேயே    யாழ்ப்பாணம்   செல்வதை  தான்  பலதடவைகள்  அவதானித்துள்ளதாகவும்  ,  

அவ்வப்போது   மதுபானத்திற்கு அடிமையான  சிலர்   ஆட்களற்ற  வீடுகளிலுள்ள   இடம்பெயர்ந்தோர்   புலம்பெயர்ந்தோரின்  வீடுகள  யன்னல்  கம்பிகள்  , கதவுகளை சட்டவிரோதமாக   கழற்றி  இவர்களுக்கு  விற்பனை செய்கின்றமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  

ஏற்கனவே அவ்வாறான  பல  நபர்கள்  பொலிசாரால் கைது  செய்யப்பட்டு  நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டிருந்தபோதும்   இவற்றினை முழுமையாக  கட்டுப்படுத்த முடியாமலிருப்பதாகவும்  ஆகவே  இவ்வாறான  போலி வியாபாரிகள்  மண்டைதீவு பொலிஸ்  சோதனை சாவடியிலே  தடுத்து  நிறுத்தப்பட்டு  

திருப்பியனுப்பப்படுவதன்  மூலமே   தீவகத்தின்  பாதுகாப்பினை  உறுதிசெய்யமுடியுமென்றும்   அது தொடர்பான   பிரேரணையொன்றினை   வேலணை பிரதேச  சபையில்  சமர்ப்பித்துள்ளதாகவும்   பிரதேச சபை  உறுப்பினர்   கருணாகரன்  நாவலன்   தெரிவிக்கின்றார்  .


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு