ஐஸ் போதைக்கு அடிமையான 35 வயதான 2 பிள்ளைகளின் தந்தை பலி!

ஆசிரியர் - Editor I
ஐஸ் போதைக்கு அடிமையான 35 வயதான 2 பிள்ளைகளின் தந்தை பலி!

போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த 35 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து 

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரியால் அவரது சடலத்தை ஊடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியபோது 

அதிகரித்த ஐஸ் போதைப் பொருள் உட்கொண்டமையால் நுரையீரல் மற்றும் உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணமேற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் அவரது குடும்பஸ்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு