பின்நவீனத்துவ கலைஞன்-கிருஷன் சிவஞானம்
பின்நவீனத்துவ கலைஞன்-கிருஷன் சிவஞானம்
மிகச் சிறந்ததும் மிகச் சரியானதும் ஆன ஒன்றைக் கண்டுபிடித்து அதை மட்டும் நிருபித்து வைத்துக்கொண்டிருந்து ஏனைய எல்லாவற்றையும் நிராகரிக்கும் போக்குத்தான் நவீனத்துவமாகும். ஆனால் பின்னவீனத்துவமானது இவ் நவீனத்துவ சிந்தனையினால் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதே ஆகும். ,வ்வாறாக அனைத்தும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தையே பின்நவீனத்துவம் உணர்த்துகின்றது.
இவ்வாறாக பின்நவீனத்துவ சிந்தனையால் ஈர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்ட விடயங்களை மிகத் துல்லியமாக தனக்கு கைவரப்பெற்ற ஊடகமான ஆற்றுகைக் கலை மற்றும் ஓவியம் சிற்பம் மூலம் தான் பிறந்த இலங்கை தேசம் முழுவதிலும் வெளிப்படுத்திய இவர் இலங்கையில் தன் பின்நவீனத்துவ சிந்தனை வெளிப்பாடுகளால் தன் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தற்போது புலம் பெயர் அகதியாக பிருத்தானியாவில் தஞ்சம் புகுந்து தனது கருத்தை மேற்குலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்புக்களின் கலைஞர்களின் பிரதிநிதியாக பிருத்தானியாவில் தனது கலைச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற கலைஞரே 'கிருஷன் சிவஞானம்' ஆவார்.
2016ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுன்கலை பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் பாடத்தில் சிறப்புப் பட்டதாரியான இவர். பல்கலைக்கழக காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் தனியாகவும் குழுவாகவும் திறந்த வெளிகளிலும் கண்காட்சி கூடங்களிலும் தனது படைப்பாக்கங்களை தனது பின்நவீனத்துவ சித்தாந்தம் மாறாத பாணியில் துல்லியமாக வெளிப்படுத்தி வருகின்றார்.
இவ் கலைஞனால் ,ராமநாதன் நுண்கலை பீடத்தில் நிகழ்த்தப்பட்ட 'கிராமத்து தலையணை' எனும் தனிக்கலை கண்காட்சியும் 'திசைகள்' எனும் குழுக் கலைக் கண்காட்சியும் சிறப்பிடம் பெறுகின்றது. இது போன்று சர்வதேச கலைஞர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்ற இலங்கையின் புகழ்பூத்த கலைக்கூடங்களான Threetha Intenational Performance Platform kw;Wk; Saskia Fernando Gallery> Celebrate Colombo ONE WON Exhibition போன்றவற்றினூடாக பல்வேறு தலைப்புக்களில் உள்நாட்டு வெளிநாட்டுக் கலைஞர்களின் மத்தியில் தான் நிகழ்த்திய தனி மற்றும் குழு கண்காட்சிகளும் திறந்த வெளி பின்நவீனத்துவ கருத்தாக்க ஆற்றுகைகளும் மற்றையவர்களுக்கு தான் சொல்ல வந்த கருத்தை இலகுவாக கொண்டு சேர்க்கக் கூடிய நுட்பமாக விளங்கியது.
இக்கலைஞரால் பிருத்தானியாவில் லண்டன் மாநகரின் புகழ்மிக்க வில்லியம்சன் கலைக்கூடத்தில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு நிகழ்தப்பட்ட தனி ஆற்றுகையானது இலங்கையின் சிறுபான்மையோருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படத்தும் முகமாக அமைந்திருந்ததுடன் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாத்தத்தை முன்னிட்டு ,வரால் அவ் லண்டண் நகரில் இன்னுமொரு குழுக் கண்காட்சியும் நடாத்தப்பட்டது இவரது கலைத்துவத்தை கண்டம் கடந்தும் முன்னெடுப்பதை வெளிப்படுத்துகின்றது.
மேலும் இக் கலைஞர் உலகலாவிய கலைஞர்களை ஒன்று சேர்த்து நாடாத்தப்படுகின்ற பல்வேறு பயிற்சிப் பாசறைகளில் உள்நாட்டுளிலும் வெளிநாட்டுகளிலும் பங்குபற்றி அவர்களுடன் இணைந்து செயற்பட்டமை ஏனைய நாடுகளுக்கும் தனது கலைத்துவத்துவத்தின் ஊடாக சமூகத்தில் புரையோடிப் போய் இருந்த பிரச்சனைகளை படம் பிடித்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது. இவ்வாறாக பின்நவீனத்துவ கலைகள் ஊடாக சமூகத்தை நேசிக்கின்ற இக் கலைஞரின் கலைப்பயனம் தொடர எமது வாழ்த்துக்கள்