வலி,வடக்கில் மக்களின் வீடுகளை இடித்து விட்டு தென்னை மரம் நடும் படையினா்..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கில் மக்களின் வீடுகளை இடித்து விட்டு தென்னை மரம் நடும் படையினா்..

வலி. வடக்குப் பகுதியில் இராணுவ வசமுள்ள மக்களின் நிலத்தினை மீண்டும் தற்போது புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டு குறித்த நிலத்தில் இராணுவத்தினர் தென்னந் தோட்டம் நாட்டுகின்றனர்.

வலி . வடக்குப் பகுதியில் ஜே.240 கிராம சேவகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள கட்டுவன் மற்றும் மயிலிட்டி தெற்கு பகுதியில் கடந்த 13ம் திகதி 863ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியின் எல்லையில் முட்கம்பி வேலியும் அமைக்கப்பட்டது.

அவ்வாறு வேலி அமைக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்களில் உள்ள மக்களின் வீடுகள் வேலிகள் மதில்கள் எல்லைகள் என்பன பெரும் பற்றைகள் என்பன தற்போது கானப்படுகின்றன. 

இவ்வாறு கானப்படும் பற்றைகளை தற்போது இராணுவத்தினர் புல்டோசர் மூலம் அகற்றி வரும் நிலையில் அனைவரின் எல்லைகள் மதில்கள் என அனைத்தும் இடித்து அழிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடித்து அழிக்கும் இடங்களில் கானப்படும் வீடுகள் மட்டுமே தற்போது வீடுகள் மட்டும் எஞ்சியுள்ளபோதும் வேலிகள் மதில்கள் அழிக்கப்படும் பிரதேசத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் விவசாயத்திற்கு ஏற்ப பதப்படுத்தப்படுகின்றது.

குறித்த பகுதியில் தென்னைப் பயிர் செய்யை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அப்பகுதி நிலங்களை மக்களிடம் ஒப்படைக்க மறுக்கும் இராணுவம் இவ்வாறு வருமானத்தை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வாறு இராணுவம் மக்களின் நிலங்களை விடாது வருமானத்தை ஈட்ட முயல்வதாகவும் குற்றம் சாட்டப்படும் அதே நேரம் தற்போது 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இவ்வாறு இடித்து அழிக்கப்பட்டு தென்னைகள் நாட்டப்படுகின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு