மாணவா்களுக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடு கொடுத்த கொக்குவில் இந்து கல்லுாாி அதிபா்..

ஆசிரியர் - Editor I
மாணவா்களுக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடு கொடுத்த கொக்குவில் இந்து கல்லுாாி அதிபா்..

கொக்குவில் இந்து கல்லூரி ஆசிரியருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பாடசாலை நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில் தமக்கு பாதுகாப்பு வழங்ககோரி படசாலை அதிபர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளார். 

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மீது அண்மையில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதன் பின்னர் அன்றையதினமே குறித்த ஆசிரியர் மீது இரவு வேளையில் தாக்குதல் 

மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆசிரியர் மீதான தாக்குதலைக் கண்டித்து சக ஆசிரியர்கள் மறு நாள் கவனயீர்ப்பு போராட்ட மொன்றையும் மேற்கொண்டிருந்தனர். 

இதன் பின்னர் ஆசிரியர் மீதான  தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குற்றச் சாட்டில் பாடசாலை மாணவரொருவரும் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு நிலைமைகள் இருக்கின்ற போது 

ஆசிரியர் மீதான தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சக மாணவனை பொலிஸார் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி மாணவர் களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

ஆயினும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரு டனான சந்திப்புகளையடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலையே கைது செய்யப்பட்டுள்ள மாணவனை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் 

ஈடுபட்ட சக மாணவர்கள் 25 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை பாடசாலை நிர்வாகம் எடுக்கவுள்ளது. அவ்வாறு தாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்ற போது பாடசாலைக்கும் தனக்கும் ஏதாவது மாணவர்களால் 

மேற்கொள்ளப்படலாமெனக் கருதி பாதுகாப்பை வழங்குமாறும் அந்த 25 மாணவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பாடசாலை அதிபர் ஞானசம்மந்தன் யாழ் பொலிஸாரி டம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு