யாழில் இறந்ததாக ஒப்படைத்த குழந்தையின் உடலைப் பரிசோதித்து அதிசயித்த சிரேஷ்ட வைத்தியர்

ஆசிரியர் - Admin
யாழில் இறந்ததாக ஒப்படைத்த குழந்தையின் உடலைப் பரிசோதித்து அதிசயித்த சிரேஷ்ட வைத்தியர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் யாழ். சங்குவேலியில் இன்று சனிக்கிழமை(09)மூன்றாவது தடவையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த குழந்தை நேற்று வெள்ளிக்கிழமை(09) இரவு குழந்தையின் நெருங்கிய உறவினர் வீடொன்றில் பாதுகாப்பான முறையில் இதன் போது சிரேஷ்ட வைத்தியரொருவர் குழந்தையைப் பரிசோதிப்பதற்காக வருகை தந்துள்ளார்.

குழந்தையின் உடலைப் பரிசோதித்த குறித்த வைத்தியர் அதிசயித்துப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியப் பரிசோதனையின் முடிவில் குழந்தை இன்னமும் உயிருடன் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெரிவிக்க முடியாமல் வைத்தியர் தடுமாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தன்னுடைய வாழ்நாள் கால வைத்தியத்துறை வரலாற்றில் இவ்வாறானதொரு அதிசயத்தைப் பார்த்ததேயில்லை எனக் குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளதுடன் கடவுளை நீங்கள் நம்புவது போல நானும் நம்புவதாகவும்,ஆகவே, குழந்தையை இன்னமும் இரண்டு நாட்கள் வைத்துப் பார்க்குமாறும் தெரிவித்து விட்டுக் கனத்த மனத்துடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு