தமிழ்தேசிய கூட்டமைப்பு- தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளா்களுக்கிடையில் முறுகல்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு- தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளா்களுக்கிடையில் முறுகல்..

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவா ளர்களுக்கும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. 

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இ ன்று யாழ்.மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது. 

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதற்கமைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக ங்களுக்கு கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து 

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக கொழும்பிலே அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் இங்கே கண்துடைப்பிற்காக இப் போராட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றார்கள்

என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதனை அவதானித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட் டமைப்பின் ஆதரவாளர்கள் செல்வராசா கஜேந்திரனுடன் முரண்பட ஆரம்பித்தனர். அதாவது யார் முண்டு கொடுக்கிறது. யார் யாரைக் காப்பாற்றுவது என்றும் 

குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் முண்னனியின் ஆதரவாளர்கள் கொழும்பில் அரசைக் காப்பாற்றி அவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு 

இங்கு பாசாங்கு காட்ட வேண்டாம். யார் யாரைக் காப்பாற்றி யார் யாருக்கு முண்டு கொடுப் பதென்பது மக்களுக்கு தெரியும். இங்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் 

அதனை வைத்து அடாவடித்தனங்களில் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதனால் அங்கு நிலைமைகள் மோசமடைந்து செல்வதை அவதானித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இரு தரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் சிறிது நேரம் போராட்டகாரர்களிடையே குழப்பம் எற்பட்டிருந்தது. இதன் போது இரு கட்சிகளினதும் தலைவர்கள் செயலாளர்கள் முக்கய பொறுப்பு வாய்ந்த தரப்பினர்கள் எனப் பலரும் இருந்தும் அவர்கள் எவருமே தத்தமது ஆதரவாளர்களைக் 

கட்டுப்படுத்துகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கவே இல்லை. அவர்களிலும் சிலர் வாய்த்தர்க்கத்திலேயே இடுபட்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆயினும் அங்கிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனோ, 

சித்தார்த்தனோ எவரும் இது தொடர்பாக எதுவும் பிரஸ்தாபித்திருக்கவில்லை. இவ்வாறு; சில நேரம் நீடித்த வாய்த்தர்க்க முரண்பாடானது அங்கிருந்த எனையவர்களால் சமாதானத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் 

வழமைபோன்று அமைதியாக நடைபெற்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு