28 வருடங்கவருடங்களின் பின் பளைவீமன்காமம் கிராமம் விடுவிப்பு..

ஆசிரியர் - Editor I
28 வருடங்கவருடங்களின் பின் பளைவீமன்காமம் கிராமம் விடுவிப்பு..

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று  பளைவீமன்காமம்  ஜே/ 236 கிராம சேவையாளர் பிரிவில்  36 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் காணிகள்,  வீடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் சில இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ள நிலையில் 17 வீடுகள் நல்லநிலையில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.  அத்துடன்  இரு வீடுகளில் அறைகளை உடைத்து அலுவலக அறையாக  கூட்டி  வித்தியாசமான வடிவில் அமைத்து பயன்படுத்துள்ளனர் மேலும் வீடுகளுக்கு வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளதுடன் பூங்கன்றுகளும் நாட்டியுள்ளனர்.  

இங்கு அரசமரமொன்று வளர்ந்த நிலையில் அங்கு இராணுவத்தினர் வணங்குவதற்கு புத்தர் சிலையொன்றும் வைத்திருந்துள்ளனர் தற்போது இராணுவத்தினரால் அங்கிருந்து  எடுத்துச் சென்றுள்ளனர்.   விளையாட்டு மைதானம் ஒன்று இராணுவத்தினர் அமைத்துள்ளதுடன் அருகில் உள்ள வீடொன்றை உடற்பயிற்சி gym செய்வதற்கான வீடாகவும் மாற்றி 2013 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் காணி விபரங்களை மீள்குடியமர்வுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கிராமசேவையாளர் அறிவித்துள்ளார்.








பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு