யாழ்.மாவட்டத்தில் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசலகூடம் இல்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசலகூடம் இல்லை..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரம் மலசலகூட தேவை உள்ளதாக கூறியிருக்கும் மேலதிக அரசா ங்க அதிபர் எஸ்.முரளீதரன், மக்கள் பெரும் பாதிப் புக்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

யாழ். மாவட்டத்தில் மலசல கூடம்  இல்லாமல் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் தேவையின்  அடிப்படையில் மலசல கூடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் மொத்தமாக மலசல கூடங்கள் 14 ஆயிரம் தேவையாக உள்ளது. ஆனால் தற்போது 891 மலசல கூடங்கள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆகவே இன்னமும் 13109 மலசல கூடங்கள் தேவைப்படுகின்றன. 

இந்நிலையில் அடுத்த கட்டமாக வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் மலசலகூடமும் சேர்ந்த்தாகவே அமையப் பெறவுள்ளன.

ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற இந்த மலசல கூடங்களுக்கு 55 ஆயிரம் ரூபாவே ஒதுக்கப்பட்டும் வருகிறது. இந்த நிதி போதாதென மக்கள் முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டினார். 

இதற்கமைய இந்த நிதியை ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவாக  அதிகரிரித்து வழங்க வேண்டுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு