மண்டைதீவு காணி விவகாரம் தொடர்பில் எடுக்கப்ப ட்ட நடவடிக்கை என்ன?

ஆசிரியர் - Editor I
மண்டைதீவு காணி விவகாரம் தொடர்பில் எடுக்கப்ப ட்ட நடவடிக்கை என்ன?

யாழ்.மண்டைதீவில் கடற்படையினால் ஆக் கிரமிக்கப்பட்டுள்ள 18 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பாக பிரதமர் ரணில் வருகையி ன்போது பேசப்பட்டமை தொடர்பில் எடுக்கப்பட்ட முன்னேற்றம் என்ன? என வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்படி கருத்தை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் 18 ஏக்கர் மக்களுடைய நிலம் கடற்படையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலத்தை மக்களிடம் மீள வழங்காமல் நிரந்தரமாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகி றது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஒரு ங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேட்கப்பட்ட போது எல்லாம் பேசி விட்டோம் என பதில் வழங்கப்பட்டது. 

ஆனால் என்ன பேசினீர்கள்? என்ன தீர்மானம் எடுத்தீர்கள்?  என பதில் வழங்கப்படு வதில்லை.  இந்நிலையில் மேற்படி மண்டைதீவு காணி விவகாரம் குறித்து நாளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு