மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவா்கள் வெளியேற்றம் தொடா்பில் நாளை கலந்துரையாடல்...

ஆசிரியர் - Editor I
மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவா்கள் வெளியேற்றம் தொடா்பில் நாளை கலந்துரையாடல்...

மருதங்கேணி பகுதியில் அடாத்தாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று நாளை காலை 7.30 மணிக்கு ம ருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந் து கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. 

மருதங்கேணி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிகளை அமைத்துக் கொண்டு 150 0ற்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் தங்கியிருக்கின்றனர். மேற்படி மீனவர்களை வெளியேற் றுமாறு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கேட்டுவருகின்றனர். 

அது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமே இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் சிலர் தகவல் தருகையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும். 

இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு