யாழ். கோட்டையைப் பாதுகாக்க நெதர்லாந்து அரசு உதவும்!

ஆசிரியர் - Admin
யாழ். கோட்டையைப் பாதுகாக்க நெதர்லாந்து அரசு உதவும்!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து அரசாங்கம் உதவி செய்யும் என்று இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ.டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ.டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர், 'யாழ்.மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைகள், அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினோhம். நெதர்லாந்து அரசாங்கம் எமது நாட்டின் அபிவிருத்திக்கும் யாழ்ப்பாணம் கோட்டையின் பாதுகாப்புக்கும் உதவி செய்வதாக தூதுவர் உறுதியளித்துள்ளதுடன், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் கல்வியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதுக்கு இரணைமடுவில் இருந்து தண்ணீர்; கொண்டுவர தேவையான நிதி தொடர்பில் ஆராய்ந்ததுடன், வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் உதவி செய்யுமென உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு