பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதை பாக்கு விற்பனை செய்வதை தடுக்க விசேட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதை பாக்கு விற்பனை செய்வதை தடுக்க விசேட நடவடிக்கை..

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்ற பெயரில் விநியோகிக்கப்படும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

அதனடிப்படையில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார் . மேலும் நால்வரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது.

மாவா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் புகையிலை மற்றும் வாசனைத் திரவியங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகரொருவர் தன்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு இன்று  25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்களின் விளக்கமறியலை எதிர்வரும்  ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை நீடித்து நீதிவான் சி. சதீஸ்தரன்  இன்று உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை தலா 2 கிலோ மாவாவுடன்  கோப்பாய் பொலிஸாராலும் யாழ்ப்பாணம் பொலிஸாராலும் கைது  செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு