வலி,வடக்கில் கால்நடைகளை திருடிவரும் கும்பல், நடவடிக்கை எடுக்ககோரும் மக்கள்...

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கில் கால்நடைகளை திருடிவரும் கும்பல், நடவடிக்கை எடுக்ககோரும் மக்கள்...

வலி . வடக்குப் பகுதியில் படையினர் அண்மையில் விடுவித்த பகுதிகளில் காணப்படும் கால் நடைகளை அப்பகுதிக்குச் சொந்தம் இல்லாதோர் பிடித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலி. வடக்கில் இருந்து 1990ம் ஆண்டு மக்கள் இடம்பெயரும்போது அவர்களின் அதிக கால்நடைகளையும் கைவிட்டே வெளியேறியிருந்தனர். அவ்வாறு கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான வாழ்வாதார மாடுகளை படையினரே பராமரித்து அதன் பயனைப் பெறுகின்றனர்.

இந்த நிலையில் வலி. வடக்கில் நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பே படையினர் கால்நடைகளை தமது பிரதேசத்திற்குட்பட்ட பகுதிக்கு நகர்த்திய பின்பே நிலங்களை விடுவிப்பதனை வழமையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்பிரல் மாதம் 13ம் திகதி 683 ஏக்கர் நிலப்புக்களை படையினர் விடுவிக்கும்போது அப்பகுதிகள் அடர்ந்த மரம் நிறைந்த்தாக கானப்பட்டு வனப்பகுதிபோல் காட்சியளிக்கும் அப்பிரதேசத்தில் 50ற்கும் 75ற்கும் இடைப்பட்ட மாடுகளும் வெளியில் அகப்பட்டுள்ளன. இதனால் குறித்த மாடுகளை பிடித்து கடத்துவதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கடத்தப்படும் மாடுகளைப் பிடிப்பதற்காக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தடங்கள் பலவற்றினை பொருத்தியுள்ளனர். இவ்வாறான செயல்பாட்டின் மூலம் சில மாடுகள் ஏற்கனவே கடத்தப்பட்டுள்ளதனால் எஞ்சியவற்றினை பாதுகாப்பதற்காகவேனும் உரியவர்கள் ஆவண செய்ய வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு