காங்கேசன்துறை-கீரிமலை வீதியில் 600மீற்றர் நீளமான வீதி கடற்படையினால் விடுவிப்பு..

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை-கீரிமலை வீதியில் 600மீற்றர் நீளமான வீதி கடற்படையினால் விடுவிப்பு..

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை சந்தியில் இருந்து  கீரிமலை வீதியூடான 600 மீற்றர் வீதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று சனிக்கிழமை மதியம்  விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் வீதியின் தெற்குபக்கமாகவுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் காங்கேசன்துறை கடற்கரை பக்கமாகவிருந்த காங்கேசன்துறை   ஐயனார் கோயில் ஒன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இக்கோயில் இடிந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.  மேலும்   இவ்வீதியூடாக  விடுவிக்கப்பட்ட  மாங்கொல்லை மாம்பிராய் காணிகளுக்கு செல்லமுடியும். 

இதேவேளை   இவ்வீதியான  காங்கேசன் துறை- கீரிமலை வீதியினை முழுமையாக திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன எனினும்  கடற்படையினர் கட்டுப்பாட்டுக்குள்ளேயே  உள்ளது.  

இங்கு கிருஷ்ணன் கோயில் ஒன்றும் உள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட   மாளிகையும் உள்ளதுடன்  இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு