யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு..

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பெரும்பான்மை இராணுவத்தை உருவாக்குகின்ற வேலை திட்டத்தின் கீழ் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இராணுவத்துக்கு தமிழ் இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் எண்ண கருவுக்கு அமைய இவ்வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தை சிங்கள இராணுவமாகவே யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்கள் பார்க்கின்ற மனோபாவம் நீடிக்கின்ற நிலையில் இதை மாற்ற வேண்டும் என்கிற தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றுடனேயே இவ்வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு இது குறித்து கருத்து கூறுகையில் 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர்கள் இராணுவத்தில் சேர முடியும், 

கல்வி தகைமையாக குறைந்த பட்சம் தரம் 08 வரை படித்திருக்க வேண்டும், மாதாந்த சம்பளமாக 50000 ரூபாய் வரை பெற முடியும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்ற இளையோர்க்ள் இம்மாவட்டத்திலேயே பணியாற்றுவதுடன் தினமும் கடமையை முடித்து வீட்டுக்கு சென்று வர முடியும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு