அரசாங்க வேலை பெற்றுக் கொடுப்பதற்கு பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் உட்பட இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
அரசாங்க வேலை பெற்றுக் கொடுப்பதற்கு பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் உட்பட இருவர் கைது!

அரசாங்க வேலை பெற்றுத்தருவதாக கூறி பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இலங்கை ஐக்கிய முன்னணியில் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் நபரும் அவருடைய செயலாளரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை புறக்கோட்டை - மிதக்கும் சந்தை பகுதியில்   உணவகம் ஒன்றுக்குள் வைத்து கைது செய்ததாக  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் நீதிமன்றுக்கு நேற்று ( 7) அறிவித்தனர்.

அதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன  கெக்குனவல உத்தரவிட்டார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த,  ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறப்படும்  நபரும் மற்றும்  அவரது செயலாளர் என கூறப்படும் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த  ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

முறைப்பாட்டாளரான பெண்ணிடம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், பாலியல் இலஞ்சமும் சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களைக் கைது செய்ததாகவும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உப பொலிஸ் பரிசோதகர்  சந்ரசிறி, உப பொலிஸ் பரிசோதகர்  ஹர்ஷ,  பொலிஸ் சார்ஜன் சமிந்த,  மற்றும் விஜேசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு