யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அனுமதி கடிதங்கள் அனைத்தும் ரத்து! மாவட்டச் செயலர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அனுமதி கடிதங்கள் அனைத்தும் ரத்து! மாவட்டச் செயலர் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களினால் இன்று புதன்கிழமை 17/08/2022க்கு முன் திகதி இடப்பட்ட எரிபொருள் விநியோகக் கடிதங்கள் எவையும் செல்லுபடியாகாது. என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மாவட்ட மட்டக் கலந்துரையாடலின் தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்திற்காக பிரதேச செயலகங்களினால் திகதி இடப்பட்டு இதுவரை வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக கடிதங்கள் செல்லுபடி அற்றதாகும். 

இவ்வாறு வழங்கப்பட்ட கடிதங்களை அனேகமானவர்கள் போட்டோ கொப்பி எடுத்து தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதாக மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 

பிரதேச செயலாளர்களினால் இதுவரை வழங்கப்பட்ட கடிதங்கள் அனைத்தும் செல்லுபடியற்றவையாக கருதப்படும். எதிர்வரும் 28 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்ற கியூ ஆர் நடைமுறையின் 

அடுத்த கட்டம் ஆரம்பிக்கும் வரை பிரதேச செயலகங்களினால் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே பொறிமுறையின் கீழ் புதிய அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்படும்.

ஆகவே எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் பிரதேச செயலங்களினால் இன்று புதன்கிழமை முதல் புதிய திகதியிடப்பட்ட கடிதங்களை மட்டும் கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு