கோப்பாய் இராணுவ முகாம் காணியில் யாழ்.சிறையை மாற்றுக யாழ். அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வலியுறுத்து

ஆசிரியர் - Admin
கோப்பாய் இராணுவ முகாம் காணியில் யாழ்.சிறையை மாற்றுக யாழ். அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வலியுறுத்து

யாழ் நகர அபிவிருத்திக்கு பண்ணை பகுதியில் உள்ள சிறை ச்சாலை காணி தேவைப்படுவ தால், சிறைச்சாலையை கோப்பா யில் இராணுவ முகாம் அமைந்து ள்ள காணிக்குள் மாற்றுமாறு யாழ் மாகாணசபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று யாழ்ப்பாண பிரதேச செயலக மண் டபத்தில் இடம்பெற்றது. அதில் யாழ்ப்பாண சிறைச்சாலை அமைந்துள்ள காணி சிறைச்சாலைக்குரியது என்றும் அதன் உறுதி தொலைந்து விட்டதாகவும் அதை உறுதிமுடித்து தரும்படி சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கோரியிருந்தனர். இந்த விட்டதாகவும் அதை உறுதிமுடித்து தரும்படி சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கோரியிருந்தனர். 

இதன்போதே மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதாவது கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் 25 ஏக்கர் காணியில் அமைந்திருந்தது. அதை பின்னர் இராணுவத்தினர் கைப்பற்றியது டன் மேலதிகமாக 25 ஏக்கரையும் பிடித்து தற்போது 50 ஏக்கரில் இராணுவ முகாம் அமைத்துள்ளனர். அந்த காணியில் சிறைச் சாலையை அமைப்பது தொடர்பாக பரி சீலனை செய்யுங்கள் என தெரிவித்தார்.

அவ் விடயம் தொடர்பாக தொடர்ந்து பதிலளித்த, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவ ரான மாவை சேனாதிராஜா, குறித்த சிறைச் சாலையை உரிய முறையில் அனுமதி பெறாது நகரின் மத்தியில் கட்டப்பட்டமை தொடர்பாக தற்போது பிரச்சினை எழுந்து ள்ளது. சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்.

யாழ் நகர் அபிவிருத்தியின் படி அப்பகுதி யில் குறித்த சிறைச்சாலை அமைப்பது தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக சிறைச்சாலை அமைச்சுக்கு அறிவிக்குமாறும். அவர்களிடம் தாம் பேசுவ தாக தெரிவித்தார்.     

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு