கரை ஒதுங்கி நின்ற படகிலிருந்து பொருட்களை எடுத்து சென்ற 5 இளைஞர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
கரை ஒதுங்கி நின்ற படகிலிருந்து பொருட்களை எடுத்து சென்ற 5 இளைஞர்கள் கைது..

யாழ்.மயிலிட்டி கடற்குதியில் நீண்ட நாட்க ளாக கரை ஒதுங்கி நிற்கும் படகில் இருந்து பொருட்களை எடுத்து சென்றார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தூர்- ஆவரங்கால் பகு தியை சேர்ந்த 5 பேரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவ ருவதாவது,

மயி­லிட்­டிக் கடற்­க­ரை­யைப் பார்­வை­யிட இளை­ஞர் குழு சென்­றுள்­ளது. அந்­தக் கடற்­ப­ரப்­பில் அநா­த­ரவாக நிற்­கும் கப்­ப­லை­யும் சென்று பார்­வை­யிட்­டுள்­ள­னர். கப்­ப­லில் உள்ள ஒரு வகை­யான பொருள்­களை எடுத்து அழுத்­திப் பார்த்­துள்­ள­னர்.

அது ஆகா­யத்­தில் சென்று பிர­கா­ச­மாக வெடித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து, அதே­போன்று கப்­ப­லில் காணப்­பட்ட பொருள்­களை எடுத்­துக் கொண்டு அந்த இளை­ஞர் குழு சென்­றுள்­ளது.

இத­னைக் கண்­ணுற்ற சிலர் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­யுள்­ள­னர். பொலி­ஸார், முச்­சக்­கர வண்­டி­யில் சென்ற இளை­ஞர்­களை மடக்கி கைது செய்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு