நீர்வேலி வாள்வெட்டு: சந்தேநபர்கள் மூவரின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

ஆசிரியர் - Admin
நீர்வேலி வாள்வெட்டு: சந்தேநபர்கள் மூவரின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதாகிய மூவரின் விளக்கமறியல் வரும் 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

சந்தேகநபர்களை அடையாள அணி வகுப்புக்காக நீதிமன்றில் இன்று முற்படுத்திய போதும் சாட்சிகள் நடக்க முடியாத காரணத்தால் மன்றில் தோன்றவில்லை என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. 

அதனால் அடையாள அணி வகுப்பை வரும் 22ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. 

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு