யாழ்.தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 3 வயது சிறுமி..! வீட்டிலிருந்து 6 கிலோ மீற்றருக்கு அப்பால் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 3 வயது சிறுமி..! வீட்டிலிருந்து 6 கிலோ மீற்றருக்கு அப்பால் மீட்பு..

யாழ்.மிருசுவில் பகுதியில் காணாமல்போனதாக கூறப்பட்ட 3 வயது சிறுமி பல மணிநேர போராட்டத்தின் பின்னர் வீட்டிலிருந்து 6 கீலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஆலயம் ஒன்றின் அருகிலிருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மிசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி திடீரென காணாமல்போயிருந்தார். இதனையடுத்து பெருமளவு இராணுவம் மற்றும் பொலிஸார், பொதுமக்கள் குவிந்து தேடுதல் மேற்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் வீட்டிலிருந்து 6 கிலோ மீற்றருக்கும் அப்பால் உள்ள மிருசுவில் மாசோி பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகிலிருந்து சிறுமி பொதுமக்களால் மீட்கப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சிறுமி அவ்வளவு துாரம் நடந்து சென்றருப்பாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் சிறுமி நடந்து சென்றமைக்கான காலடி தடங்கள் காணப்படுவதாகவும், மேலும் அந்த வழியில் நீர் பரப்பு ஒன்றும் காணப்படுவதாக தொியவருகின்றது. 

மேற்படி சம்பவத்தினால் பிரதேசத்தில் கடும் பதற்றம் நிலவியமை குறிப்பிடத்தக்கது. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு