இரணைதீவு மக்களின் போராட்டம் வெற்றி..மீள்குடியேற்ற அனுமதி வழங்கியது அரசு...

ஆசிரியர் - Editor I
இரணைதீவு மக்களின் போராட்டம் வெற்றி..மீள்குடியேற்ற அனுமதி வழங்கியது அரசு...

கிளிநொச்சி- இரணைதீவு மக்கள் இரணைதீவில் நிரந்தரமாக தங்கி வாழ்வதற்கு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் இரணைதீவு மக்களின் ஒரு வருட போராட்டம் வெற்றியடைந்துள்ளது. 

இரணைதீவு மக்கள் தமது நிலத்தை கடற்படையின் ஆக்கிரமிப்பிலிருந்து விட்டுக்  கொடுக்கவேண்டும். எனக்கோரி கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போ ராட்டத்தை நடத்தியிருந்தார்கள். 

இந்நிலையில் மக்களின் காணிகளை மீள வழங்குவதாக அரசாங்கம் பல தடவைகள் உத்தரவாதம் கொடுத்தபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்காத நி லையில இரணைதீவு மக்கள் கடந்த மாதம் 23ம் திகதி

தமது சொந்த நிலத்தில் வெள்ளை கொடியுடன் புகுந்து மீள்குடியேறினர். இதனையடுத்து கொழும்பிலிருந்து மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், மற்றும் பா துகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஸ, 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் எஸ்.எஸ்.ரணசிங்க அகியோர் இன்று விசேட வி மானம் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்கிருந்து கடற்படையி ன் படகு மூலம் இரணைதீவுக்கு சென்றிருந்தனர். 

இதன்போது இரணைதீவில் தங்கியிருக்கும் 190 குடும்பங்களும் அங்கேயே நிரந்தரமா க தங்கியிருப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் அனுமதியளித்தார்கள். மேலும் 6 தொடக்கம் 7 ஏக்கர் நிலத்தை கடற்படை பயன்படுத்தும் எனவும், 

மிகுதி நிலத்தில் மக்கள் சுதந்திரமாக பயன்படுத்தலாம், நடமாடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இரணைதீவு மக்களின் தேவைகள் படிப்படியாக தீர்த்துவைக்கப்ப டும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு