கடலுணவு கழிவுகளை கொட்டிய வாகனத்தை மடக்கி பிடித்த பொன்னாலை இளைஞர்கள்..

ஆசிரியர் - Editor I
கடலுணவு கழிவுகளை கொட்டிய வாகனத்தை மடக்கி பிடித்த பொன்னாலை இளைஞர்கள்..

வெளி இடத்தில் இருந்து நண்டுக் கோதுகளைக் கொண்டுவந்து பொன்னாலையில் கொட்டிய கூலர் வாகனம் இன்று அதிகாலை  தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது.

இந்த இடத்தில் கடந்த பல தடவைகள் இதேபோன்று நண்டுக் கோதுகள் கொண்டுவந்து கொட்டப்பட்டன. 

இதனால் அங்கு அதிகளவான புளுக்கள் பரவியுள்ளதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

மேற்படி நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பொன்னா லை இளைஞர்கள் இன்று அதிகாலை  நண்டுக்கோதுகளைக் கொட்டும்போது கையும்மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

பின்னர் நண்டு கோதுகளை கொட்டிய நிறுவனத் தரப்பில் வந்தவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில்  இதுவரை கொட்டப்பட்ட நண்டுக் கழிவுகளை அவர்களே அகற்றி, சுத்தம் செய்து தருவர் என்ற அடிப்படையில் தற்போது கூலர் வாகனம்  விடுவிக்கப்பட்டுள்ளது.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு