இது எங்கள் மண் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டோம், இரணைதீவு மக்கள் திடம்..

ஆசிரியர் - Editor I
இது எங்கள் மண் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டோம், இரணைதீவு மக்கள் திடம்..

இரணைதீவு எங்களுடைய மண். இங்கேதான் எங்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது. இங் கேதான் நாங்கள் சுதந்திரமாக வாழலாம். எங்களுடைய மண்ணிலிருந்து இனிமேல் நாங்கள் எங்கும் செல்லப்போவதில்லை. என இரணைதீவு மக்கள் உருக்கமாக கூறியுள்ளனர். 

இன்றைய தினம் இரணைதீவு மக்களை சந்திப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் தலமையிலான குழு இரணைதீவுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனர். 

இதன்போது மேலும் மக்கள் கூறுகையில், 1992ம் ஆண்டு போர் காரணமாக சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்தோம். பின்னர் இரணைமாதா நகரில் பல்வேறு இன்ன ல்களுக்கும் மத்தியிலும், போருக்கு மத்தியிலும் வாழ்ந்தோம். 

வாழ்வாதாரரீதியாக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் 26 வருடங்கள் வாழ்ந்து வந்தோம். இப்போது நாங்களாகவே வெள்கை கொடிகளுடன் எங்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேறியுள்ளோம். 

எங்களுக்கு சட்டரீதியாக மீள்குடியே றுவதற்கான உரித்துக்களை பெற்றுக் கொடுக்கவேண் டும். பலரும் வருகிறார்கள் ஆனால் ஆக்கபூர்வமான பதிலை எவரும் கொடுக்கவில்லை. எங்க ளுக்கு சட்டரீதியாக மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்படவேண்டும். 

மேலும் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களை வெளியேற்றம் செய்யகூடாது. அவ்வாறு செய்தா லும் நாங்கள் வெளியேறபோவதுமில்லை. மேலும் 26 வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேறி பற்றைகளுக்குள், விஷ பூச்சிகளுக்கும், பாம்புகளுக்குமிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

எமக்கு உடனடியாக அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவேண்டும். மேலும் குடிநீர், மலசலகூடம் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படவேண்டும். என மக்கள் கேட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு