காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் - கோண்டாவிலில் வர்த்தகர் கைகள் கட்டப்பட்டு கடத்தல்

ஆசிரியர் - Admin
காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் - கோண்டாவிலில் வர்த்தகர் கைகள் கட்டப்பட்டு கடத்தல்

யாழ்ப்பாணம் கோண்டாவில் சந்திக்கு அருகில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் நேற்றுக் காலை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரான ந.ஸ்ரீ ஸ்காந்தா (வயது 52) என்பவர் நேற்றுக் காலை 8 மணியளவில் குறித்த நிலையத்துக்கு வந்தபணிய ஆரம்பித்துள்ளார்.

அப்போது KI 6557 இலக்க  காரில் வந்த நபர்களால் அவரின் கைகள் கட்டப்பட்டு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு குறித்த நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக நடவடிக் கைகளை மேற்கொ ண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குறித்த நபருடைய சகோத ரனான நவரத்தினராசா என்பவர் இது குறித்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப் பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அதாவது கடத் தப்பட்ட நபருக்கு நாளை யாழ் நீதிமன்றில் வழக்கு ஒன்று இருப்பதாகவும், அவருக்கு சாட்சி கையெழுத்து தான் இட்ட காரணத்தினால் இவர் தொடர்பான விபரத்தை அறிந்து தருமாறு கோரி ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு