முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறிய பேரறிவாளன்!!

ஆசிரியர் - Editor II
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறிய பேரறிவாளன்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இன்று புதன்கிழமை காலை உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த அதிரடி தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். விடுதலையான பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து பேரறிவாறன் மற்றும் அவரது தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று புதன்கிழமை மாலை சென்னை சென்றனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் பேரறிவாளன் விடுதலை பெற்ற மகிழ்ச்சியை முதல்வருடன் பகிர்ந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு