SuperTopAds

கட்டுப்பணத்தை செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி

ஆசிரியர் - Admin
கட்டுப்பணத்தை செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று (14) காலை மன்னார் நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளது.

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை தேர்தலில் மாத்திரமே போட்டியிடும் நிலையில் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.