SuperTopAds

கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு-சம்மாந்துறை பகுதியில் நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு-சம்மாந்துறை பகுதியில் நடவடிக்கை

கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு-சம்மாந்துறை பகுதியில் நடவடிக்கை 

சம்மாந்துறையில்  போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை  பொலிஸாருடன்  இணைந்து 16 கட்டாக்காலி மாடுகளை  பிடித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தவண்ணமுள்ளமையை தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில்  போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள்  வியாழக்கிழமை(3)  பிடிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச சபையினால்  கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பலதடவைகள்  அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் இம்மாட்டு உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவும் மேலதிகமாக அறவிடப்படும்.

  மேலும் 03 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறாவிட்டால் பொலிசார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  பிரதேச சபை தெரிவித்துள்ளது.