தையிட்டி காணி உரிமையாளர்களை வழக்கிற்கு இழுக்க முயற்சிப்பது ஏன்?

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.
வலிகாம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை,இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டுவாறீங்கள் நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார்.
இராணுவம் அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பெரிய விகாரையை கட்டியுள்ளது,அது தொடர்பில் நாங்களிள் ஆளுநரிடம் போயிருக்கின்றோம். முன்னைய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் போயிருக்கின்றோம். இது முன்னைய அரசாங்கங்கள் இனவாதமாக செயற்பட்ட விடயம் என நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் தெரிவித்திருந்தீர்கள்-இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
எமது ஆட்சியில் இது இடம்பெறாது என எமக்கு வாக்குறுதிகள் தந்திருந்தீர்கள். ஆளுநரும் அறிக்கை எழுதுகின்றார் எழுதுகின்றார் இன்றுவரை எழுதிமுடியவில்லை.
கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.
அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்?
பிரதேச செயலகம் தொடர்பாகவோ அல்லது இந்த பிரதேசத்திலிருந்து மக்கள் தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட தாங்களோ இது தொடர்பாக அறிந்திருக்கின்றீர்களா அல்லது இன்றுவரை இது தொடர்பில் எதுவும் தெரியாது என்ற பதிலைதான் கூறப்போகின்றீர்களா?
இது தொடர்பான நடவடிக்கை என்ன கட்டத்தில் உள்ளது என்பதை இந்த இடத்தில் மக்களிற்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டும்.
இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை,இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டுவாறீங்கள் நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது,
இதற்கு உடனடியாக தீர்வைதரவேண்டும், இது சம்பந்தமாக தங்கடை பதிலை தரவேண்டும்.
நீங்கள் சட்டத்தினால் செய்ய முடியும் என தெரிவிக்கின்றீர்கள் எங்களிற்கு இந்த நாட்டின் சட்டத்திலேயோ நீதியிலோ நம்பிக்கை இல்லை.நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட பல விடயங்களை ஏதேச்சதிகாரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்,நாங்கள் குறுந்தூர் மலையை உதாரணமாக பார்க்கலாம், மேலதிக கட்டிடம் கட்டக்கூடாது என நீதிமன்றம் சொல்லியும்,கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள், சட்டத்திடம் அந்த பிரச்சினையை விட்டுவிட்டால் பின்னர் அதனை பொதுவெளியில் கதைக்க முடியாது.
அதனை விடுத்து ஏன் நீங்கள் மற்றபக்கமாக பார்க்ககூடாது சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவோ அல்லது பௌத்தசாசன அமைச்சோ நாங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றோம் என சிறையில் போடலாம் ஏன் போடவில்லை,உங்கள் பக்கத்தில் உறுதிகளோ ஆவணங்களோ இல்லை என்று நிச்சயமாக தெரிந்தும் வழக்கு தொடர கோருகின்றார்கள் என்றால்,உங்களுக்கு நன்கு தெரியும் அந்த இடத்தில தீர்ப்பொன்று வரும்போது நீங்கள் அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு உங்களிற்கு சார்பாக சட்டத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான் வழக்கிற்கு கூப்பிடுகின்றீர்கள்.
உங்களிடத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லை எங்களிடத்தில் உறுதி இருக்கின்றது ஏன் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டும். பிரதேச செயலகத்தில், கச்சேரியில் சகல ஆவணங்களும் உள்ளன. ஆதனை எடுத்துபாருங்கள், காணி அமைச்சின் ஊடாக இந்த பிரச்சினையை தீருங்கள்.