குடியிருப்பு பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்கப்படுவதை கண்டித்து முஸ்லிம் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
குடியிருப்பு பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்கப்படுவதை கண்டித்து முஸ்லிம் மக்கள் போராட்டம்..

முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் நட்சத்தி ர ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதைக் கண்டித்து முஸ்லிம் மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழில் கிராம சேவகர் பிரிவு ஜே87 முஸ்லிம் கல்லுரி வீதி ஜின்னா வீதி ஹலீமா ஒழுங்கை ஆகிய பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டலோன்று யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி, நகர அபிவிருத்தி அதிகாசபையின் நேரடி அனுமதிபெற்றே  கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

மேற்படி இந்த பிரதேசத்தில் இத்தகைய ஒரு வர்த்தக நோக்கம் கொண்ட ஹோட்டலோ அல்லது மதுபான நிலையமோ நிறுவப்படுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை  என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பணத்தில் காணிகள் இல்லாத நிலையில் பல குடும்பங்கள் வாழ்கின்றனர்.

இது குடியிருப்பு பிரதேசம் என்ற காரணத்தினால் இப் பிரதேசத்தில் இப்படியான பாரிய நோக்கிலான வியாபார கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பதனை இது சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் நிரந்தரமாக தடை செய்வதற்க்கான சட்ட ரீதியான எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறனர்.

இதற்கு நிரந்தரமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 12.05.2018 இன்று முதல் அமுலாகும் வரையிலான உடனடி தடை உத்தரவு யாழ் மாநகர சபையினால் பிறப்பிக்கப்படல் வேண்டும். என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு