இன்றைய நாள் எப்படி 12/05/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 12/05/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 29ம் தேதி, ஷாபான் 25ம் தேதி,
12.5.18 சனிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 9:16 வரை;
அதன் பின் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11:54 வரை;
அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: நிதானமுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக் கூடாது

ரிஷபம்: அன்றாடப் பணிகளில் பொறுப்புடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

மிதுனம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த கதி விலகும். ஆதாயம் அதிகரிக்கும். பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

கடகம்: நல்லவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். புதிய அணுகுமுறையால் தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறை சரி செய்வீர்கள். வருமானம் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிரி தொல்லை மறையும்.

சிம்மம்: சிறு செயல் கூட கடினமாக தோன்றலாம். பேச்சில் நிதானம் தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கன்னி: மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் குறையும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

துலாம்: கடந்த கால உழைப்புக்கு நற்பலன் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கம். இயன்ற வகையில் தானம், தர்மத்தில் ஈடுபடுவீர்கள்

விருச்சிகம்: குடும்பத்தினர் மூலம் தேவையான உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் நகை, பணம் விஷயத்தில் கவனமாக இருக்கவும்

தனுசு: நட்பின் பெருமையை எண்ணி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடந்தேறும்.

மகரம்: மனதில் குழப்பம் நீங்கும். நல்லோரின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகைகளை தவிர்க்கவும்

கும்பம்: எதிர்பார்த்த வெற்றி செய்தி வந்து சேரும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும்

மீனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள்.உபரி வருமானம் வந்து சேரும். புதிதாக சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.