வித்தியா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவருக்கு சிக்கல்

ஆசிரியர் - Admin
வித்தியா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவருக்கு சிக்கல்

புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாணவியின் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அக் குற்றச் சம்பவத்தோடு இவர் தொடர்புபடவில்லை என தீர்ப்பளித்த  ரயலட்பார் நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்த்து.

இந்நபருக்கு எதிராக பிறிதொரு வழக்கை ஊர்காவற்றுறை பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு ஏற்பவே இன்றுவரை குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இவ் வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர் சார்பாக முன்னிலையான சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி, குறித்த நபருக்கு பிணையை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு பத்திரங்களை தாக்கல் செய்வது தொடர்பாகவும், இவர் அச்சுறுத்தல் விடுத்த பொலிஸார் வித்தியா கொலை வழக்கில் சாட்சியாக உள்ளாரா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் போது நீதிவான், குறித்த மாணவியின் கொலை வழக்கு முடிவடைந்து விட்ட நிலையில் இந்நபருக்கான பிணை விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேற்படி இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் பிணை வழங்கும் அதிகாரம் தமது நீதிமன்றுக்கு இல்லை எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து குறித்த நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கு நடவடிக்கையை ஒத்திவைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு