யாழில் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய வாகனம் மடக்கிப் பிடிப்பு

ஆசிரியர் - Admin
யாழில் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய வாகனம் மடக்கிப் பிடிப்பு

அனுமதி இன்றித் தறித்த வேம்பு மரத்தை மகேந்திராவில் ஏற்றிச் சென்றவர் கல்வியங்காடு , பரமேஸ்வராச் சந்தி ஆகிய இடங்களில் இரண்டு மோட்டார் சைக்கிள் முட்டிமோதிய நிலையில் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோடினார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியூடாகப் பயணித்தவேளையில் புருத்தித்துறை வீதியில் ஓர் மோட்டார் சைக்கிளை  மோதிய நிலையில் நிறுத்தாமல் சென்ற மகேந்திரா இன வாகனத்தை சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டியுள்ளனர். இதன்போது மகேந்திராவின் சாராதி வாகனத்தை நிறுத்தாது வேகமாச் செலுத்தி திருநெல்வேலி சிவன் அம்மன் வீதியூடாகப் பயணித்து பலாலி வீதியினை அடைந்துள்ளார்.

இதன்போது பலாலி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓர் கல்வித் திணைக்கள அதிகாரியை மோதித் தள்ளியவாறு தப்பியோட முயன்ற சமயம் அதிகாரி வாகனத்தை மடக்க முயன்றுள்ளார். இதனால் வாகனத்தின் சாரதி வாகனத்தை கைவிட்டு குதித்து தப்பியோடினார்.

இதனொயடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிசார் உடன் தறித்து ஏற்றிய வேம்பு மரம் இருப்பதனால் அனுமதியற்ற மரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தை கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு