போதை அடிமையை துாண்டிவிட்டு, பெண்ணை கொலை செய்த பெண்! யாழ்.மணியந்தோட்டத்தில் நடந்தது இதுதானாம்..

ஆசிரியர் - Editor I
போதை அடிமையை துாண்டிவிட்டு, பெண்ணை கொலை செய்த பெண்! யாழ்.மணியந்தோட்டத்தில் நடந்தது இதுதானாம்..

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீடொன்றின் பின்னால் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி பிரதீபன் ஜசிந்தா (வயது42) என்ற பெண் காணாமல்போயிருந்த நிலையில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது வீட்டின் பின்னர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து புதைக்கப்பட்ட நிலையில் காணாமல்போன பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. 

இந்நிலையில் குறித்த பெண்ணை கொலை செய்தவர் ஒரு போதை அடிமை எனவும் மீற்றர் வட்டிக் கொடுக்கல் வாங்கல் காரணமாக பெண் ஒருவரே போதைப் பொருளுக்கு பணம் கொடுத்து இளைஞனை துாண்டியதாக கூறப்படுகின்றது. 

கொலை செய்யப்பட்ட ஜசிந்தா என்ற பெண்ணிடம் கடற்றொழில் உபகரணம் வாங்க 25 வீத மீற்றர் வட்டிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான பெண் வாங்கியுள்ளார். 

எனினும் குறிக்கப்பட்ட திகதியில் பணத்தை மீள கொடுக்காமையால் பணம் கொடுத்த ஜசிந்தா பல தடவைகள் சந்தேகநபரான பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜசிந்தாவை கொலை செய்வதற்கு

குறித்த பெண் திட்டம் தீட்டியுள்ளதுடன், அதற்காக தனது உறவுக்காரரான இளைஞனுக்கு போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார். இவ்வாறிருக்க 1ம் திகதி ஜசிந்தா பணம் வசூலிப்பதற்காக சந்தேகநபருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். 

அங்கு வட்டிக்கு சந்தேகநபரான பெண்ணுனும் இளைஞனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பணம் கேட்டு சென்ற ஜசிந்தாவை அங்கிருந்த இளைஞன் இரண்டு தடவைகள் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கியுள்ளார். 

தாக்குதலால் நிலைகுறைந்த ஜசிந்தா தலையில் விழுந்த நிலையில் பணம் வாங்கிய பெண்ணும் இளைஞனும் இணைந்து தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். இது நடைபெற்று முடிந்திருக்கையில் 

பணம் வாங்கிய பெண்ணின் கணவன் கடற்றொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்குள் ஜசிந்தா கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டு முரண்பட்டுள்ளதுடன் பின்னர் 3 பேராக இணைந்து 

விட்டின் பின்னால் இருந்த குழிக்குள் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர். ஆனால் ஜசிந்தாவின் மோட்டார் சைக்கிள் வளாகத்திற்குள்ளேயே இருந்துள்ளது. பின்னர் தொழிலாளி ஒருவரை பிடித்து குப்பை போடுவதற்கென கூறி குழி வெட்டி 

அதனுள் மோட்டார் சைக்கிளை புதைத்துள்ளனர். இது நடந்து முடிந்திருக்கையில் கொலைக்கு துாண்டிய பெண்ணிடம் கொலை செய்த இளைஞன் போதைப் பொருள் வாங்குவதற்காக மீண்டும் பணம் கேட்டுள்ளான். 

ஆனால் அவர் பணம் வழங்க மறுத்த நிலையில் போதை அடிமையான இளைஞன் மற்றொரு வட்டி தொழில் செய்யும் நபரிடம் சென்று வட்டி அக்காவை கொலை செய்து புதைத்துள்ளேன் பணம் தராவிட்டால் யாரையும் அப்படி செய்வேன் என மிரட்டியுள்ளான். 

எனினும் அதனை பொருட்படுத்தாத அந்த நபர் பின்னர் பெண் ஒருவர் காணாமல்போனமை தொடர்பான தகவல் அறிந்த நிலையில் போதை அடிமையான அந்த இளைஞன் கூறியது நினைவில் படவே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டதுடன் பெண் உட்பட 3 சந்தேகநபர்களை கைது செய்து விசாரித்ததன் அடிப்படையில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் மற்றும் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு