SuperTopAds

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும்..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவர முயற்சிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் என கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார். 

நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கோட்டாபாய அரசாங்கத்துக்கு எதிரான 

அனைத்து செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா மேலும் கூறியிரக்கின்றார்.