SuperTopAds

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல சுழற்சி..! வடக்கில் அடுத்த 3 நாட்களுக்கு மழை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல சுழற்சி..! வடக்கில் அடுத்த 3 நாட்களுக்கு மழை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல சூழற்சியினால் அடுத்துவரும் 3 நாட்களுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த மழை இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் 

இடி மின்னல் நிகழ்வு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும். மேலும் மேற்காவுகை செயற்பாடு காரணமாக எதிர்வரும் 18.04.2022 வரை நண்பகலுக்கு பின்னர அல்லது இரவில் அல்லது அதிகாலையில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. 

நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் உணவுப்பொருட்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் விவசாய செயற்பாடுகளை உரிய பாதுகாப்பு 

மற்றும் முன்னேற்பாடுகளுடன் மேற்கொள்வது அவற்றை பாதுகாக்கும். எனவே விவசாயிகள் இம்முன்னறிவித்தலை கருத்தில் கொண்டு செயற்படுவது அவர்களுக்கு வரக்கூடிய விவசாய பாதிப்புக்களை இயலுமான வரையில் குறைக்கும்.