SuperTopAds

யாழ்.திருநெல்வேலி சந்தையில் 10 வீத கழிவு நடைமுறை நிறுத்தம்! நல்லுார் பிரதேசசபை தவிசாளருக்கு நன்றி கூறிய அங்கஜன் இராமநாதன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தையில் 10 வீத கழிவு நடைமுறை நிறுத்தம்! நல்லுார் பிரதேசசபை தவிசாளருக்கு நன்றி கூறிய அங்கஜன் இராமநாதன்..

யாழ்.திருநெல்வேலி பொதுச் சந்தையில் விவசாயிகள் 10 வீத கழிவுகளின்றி தமது உற்பத்திகளை தாமே சந்தைகளுக்கு வழங்கலாம் என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைகளில் வழங்கும்போது 10வீத கழிவுகள் வழங்கப்படுவதால் தாம் நஸ்டங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அண்மையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் குறித்த விடயம் தொடர்பில் விவசாய அமைப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்களுடன் சந்தைகளில் அறவிடப்படும் 10 வீத கழிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அதனை நிறுத்துவதற்கு தவிசாளர்களின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனை நடைமுறைப்படுத்துவதில் நல்லூர் பிரதேசசபை முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உறுதியளித்தார். ஆகவே யாழ்.மாவட்டத்திலுள்ள ஏனைய சபைகளின் கீழ் உள்ள பொதுச் சந்தைகளில் அறவிடப்படும் 10 வீத வரியை நீக்குவதற்கு 

பிரதேச தவிசாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.