யாழ்.பிரதான வீதியில் ஜே.வி.பி அலுவலகம் முன்பாக பொலிஸார் கெடுபிடி..! ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.பிரதான வீதியில் ஜே.வி.பி அலுவலகம் முன்பாக பொலிஸார் கெடுபிடி..! ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல்...

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.பிரதான வீதியில் உள்ள JVP அலுவலகம் முன்பாக பொலிஸாருடைய கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளனர்.

ஊடகவியலாளர்களை  வழிமறித்ததுடன், வீதியில்  பயணிக்க  முடியாது எனவும் ஊடகவியலாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்து  கைத்தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளை  கருதி வீதியில் பயணிப்போர் தமக்குரிய  அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி 

வீதிகளில் பயணிக்க முடியும் என ஊடக பேச்சாளரால்  தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.பொலிசாரினால்  ஊடகவியலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அனைவரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் .


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு