ஜனாதிபதி வீடு முற்றுகைச் சம்பவத்துடன் தொடர்புடைய 22 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! கூச்சலிட்டு வரவேற்பு, 400ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலை...

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வீடு முற்றுகைச் சம்பவத்துடன் தொடர்புடைய 22 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! கூச்சலிட்டு வரவேற்பு, 400ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலை...

மிரிஹான பகுதியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நிலையில் கைதான 22 பேர் 1 லட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதான மேலும் 6 பேருக்கு ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 

அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு 

கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சுமார் 400ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளதுடன், போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக கரகோஸங்களும் எழுப்பபட்டன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு