இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு நேர அட்டவணை வெளியானது..!

ஆசிரியர் - Editor I
இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு நேர அட்டவணை வெளியானது..!

நாடு முழுவதும் இன்றைய தினம் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில் மின்வெட்டு அமுல்ப்படுத்தும் நேர அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது. 

அதற்கமைய,

 A,B,C,D,E மற்றும் F ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

P,Q,R மற்றும் S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மாலை 4 மணி முதல் 6 மாலை மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு