SuperTopAds

12ம் திகதி வீடு புகுந்து வாள்வெட்டு, 26ம் திகதி இளைஞன் கடத்தல்..! யாழ்.புத்துார் - நவக்கிரியில் நடந்தது என்ன? பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
12ம் திகதி வீடு புகுந்து வாள்வெட்டு, 26ம் திகதி இளைஞன் கடத்தல்..! யாழ்.புத்துார் - நவக்கிரியில் நடந்தது என்ன? பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.புத்துார் - நவக்கிரி பகுதி பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞன் ஒருவன் இனந்தொியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

அருந்தவராசா சயந்தன் (வயது30) என்ற இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் மின்வெட்டு அமுலில் இருந்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த இளைஞனின் வீட்டு வளவுக்குள் இருந்து சிலர் பாய்ந்து ஓடுவதை அவதானித்த இளைஞன் அவர்களை துரத்திச் சென்றதாகவும் அதன்போது வீட்டுக்கு வெளியே தோட்ட வெளியில் நின்றிருந்த சிலர் இளைஞனை திருப்பி துரத்தி சென்றதாகவும்.

அப்போது அங்கிருந்து ஓடிய இளைஞன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவும் பெற்றோர் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளதுடன், காணாமல்போனதாக கூறப்படும் இளைஞனின் தொலைபேசி வீட்டிலிருந்து 400 மீற்றர் துாரத்தில் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளர். 

மேலும் குறித்த இளைஞனின் வீட்டக்குள் கடந்த 12ம் திகதி புகுந்த இனந்தொியாத நபர்கள் இளைஞனின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த அவர் தற்போதும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான இருவர் நேற்றுமுன்தினம் பிணையில் விடுதலையாகியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.