SuperTopAds

சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!! -ரஷ்யாவின் கெடுவை நிராகரித்த உக்ரைன்-

ஆசிரியர் - Editor II
சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!! -ரஷ்யாவின் கெடுவை நிராகரித்த உக்ரைன்-

உக்ரைன் இராணுவத்தினர் தமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என ரஷ்ய அரசு விதித்த நிபந்தனையை உக்ரைன் உடனடியாக நிராகரித்தது.

ரஷ்யப் படைகளிடம் எமது படைகள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள உக்ரைன் துணைப் பிரதம மந்திரி இரினா வெரேஷ்சுக் சரணடைதல், ஆயுதங்களை கீழே வைப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை. இதை நாங்கள் ஏற்கனவே ரஷ்ய தரப்பிற்கு தெரிவித்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மரியுபோல் நகரம் ரஷ்ய முற்றுகைக்குள் உள்ள நிலையில் அங்குள்ள உக்ரேனிய படையினர் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைய வேண்டும். ஆயுதங்களைக் கீழே போடும் அனைவரும் மரியுபோலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று ரஷ்ய தேசிய மையத்தின் பணிப்பாளர் அறிவித்தார். 

இதன்படி உக்ரைன் இராணுவத்திற்கு இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 5 மணி வரை சரணடைவதற்கு இறுதிக் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  இருப்பினும் இதனை உக்ரைன் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.