SuperTopAds

ஒரு உயிருக்கு ஒரு லட்சமா..? கண்ணீருடன் அலையும் உறவுகள் சகித்துக் கொள்ளகூடிய தீர்வைக் கொடுங்கள்...

ஆசிரியர் - Editor I
ஒரு உயிருக்கு ஒரு லட்சமா..? கண்ணீருடன் அலையும் உறவுகள் சகித்துக் கொள்ளகூடிய தீர்வைக் கொடுங்கள்...

காணாமல்போனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதை சகிக்க முடியாது. என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் வியாழக்கிழமை அபிவிருத்தி லொத்தர் சபையின் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் காணாமல்போன உறவுகளுக்காக ஒரு லட்சம் ரூபாவை வழங்குவது உயிர் ஒன்றின் விலை ஒரு லட்சமா எனக் கேள்வி எழுகிறது. இதை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் உறவுகளுக்கு சகிக்க கூடிய ஒரு தீர்வினை வழங்க வேண்டும். காணாமல்போன குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் தமது தாலியை கூட கழற்றுவதா? இல்லையா? என்பது தொடர்பில் அவர்களின் மனம் திண்டாடி வருகிறது.

அவர்களுக்கான அநியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடக உள்ள நிலையில் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடுவதை விட அதற்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.