வடமாகாண மீன்பிடித்துறையில் இந்திய முதலீடா? யாழ்ப்பாணத்தில் இந்திய துாதுவர் கோபால் பாக்லே கூறியது என்ன?

ஆசிரியர் - Editor I
வடமாகாண மீன்பிடித்துறையில் இந்திய முதலீடா? யாழ்ப்பாணத்தில் இந்திய துாதுவர் கோபால் பாக்லே கூறியது என்ன?

வடமாகாண மீனவர்களுக்கு உதவுவதற்காக இந்திய முதலீடுகளை இங்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவிதிட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக இந்திய முதலீடுகளையும் இங்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம். இதன் மூலம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் 

மற்றும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவை குறிப்பாக கடற்தொழில் அமைச்சு மாவட்ட செயலக ஒத்துழைப்பு தேவை. 

இந்த உதவிகள் வடக்கு மீனவர்களுக்கு மட்டுமல்லாது எனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். மேலும் இந்திய அரசாங்கத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த கலாச்சார மண்டபத்தில் இரு நாடுகளும் இணைந்து ஏவ்வாறு மேலாண்மை செய்வது என்பது தொடர்பில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.இந்தக் கலாச்சார மண்டபம் யாழ்ப்பாண மக்களுக்கு உரியது. 

இந்த மண்டபம் சிறந்த முறையில் செயற்படுவதற்கு மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை அந்த ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.இலங்கை இந்திய உறவுகள் மேம்பட வேண்டும் 

கச்சதீவு திருவிழா நடைபெறுமா என்பதில் கேள்விகளே இருந்தன எனினும் இந்த முறை குறைவளவான பக்தர்கள் என்றாலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.இலங்கை அரசாங்கம் மற்றும் கடற்தொழில் அமைச்சம் 

யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் எண்ணிக்கை முக்கியமல்ல பாரம்பரியம் முக்கியம் இலங கை இந்திய நட்பு தொடரும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு