10 வருடங்களுக்கும் மேலாக இடமாற்றம் இல்லாமல் 132 ஆசிரியர்கள் யாழ்.வலயத்தில் மட்டும்! கண்டுகொள்ளப்படுமா?
யாழ்.கல்வி வலயத்தில் 132 ஆசிரியர்கள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இடமாற்றம் எதுவுமில்லாமல் ஒரே பாடசாலைகளில் கற்பித்துக் கொண்டிருக்கின்றமை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சின் பலவருடங்களாக ஆசிரியர் இடமாற்றம் முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. என பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், யாழ்வலயத்தில் மட்டும் பத்து வருடங்களை கடந்தும் இதுவரை இடமாற்றம் இல்லாமல்
132 ஆசிரியர்கள் இருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கான பதில் ஊடாக அம்பலமாகியுள்ளது. சுமார் 7 வருடங்கள் கடந்தும் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப முடியாதுள்ள நிலையில்,
யாழ்.கல்வி வலயத்தில் 132 ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கும் மேல் இடமாற்றம் இல்லாமல் இருப்பது எப்படி? இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்த கல்வி அதிகாரிகள் மௌனமாக உள்ள நிலையில், ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? பாரபட்சமான இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளாக இடமாற்றம் இல்லாமல் ஒரே இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளிலேயே உள்ளதாகவும் அறிய முடிகின்றது.